Born 27 MAR 1962
Died 12 AUG 2019
Mr Sinnathambi Nithyananthan
Age 57
Sinnathambi Nithyananthan 1962 - 2019 Chunnakam Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகத்தில் 27/mar/1962 இல் திரு.திருமதி சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நித்தியானந்தன் அவர்கள்   இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கணேசமூர்த்தி,தவமணி,விக்னேஸ்வரி என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி நாகரத்தினம் கனகமலர் தம்பதிகளின் அன்பு மகள் மங்கையற்செல்வம்(மங்கை) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கஜானன், கம்சாஜினி, தரஞ்சன், தனுசிகா எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                               

மேலும் நித்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்,இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.08.2019 இல் 57 வயதில் இளவாலையில் உள்ள சித்திரமேழியில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சுன்னாகம் தந்த 
........சுந்தர வதனமே
என்னாலும் அன்பு 
........மழை பொழிந்து
கண்ணாக காத்த 
.........உறவே
தரணியில் நாங்கள் 
.........ஒளிர
பண்பாக வளர்த்து 
.........உயர்த்திய உயிரே
கண்ணில் நீர் வழிய 
.........கலங்கி அழுகிறோம்