6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 SEP 1996
இறப்பு 18 JUN 2013
அமரர் டினேஸ் சுஜீத் விஜயகுமார்
இறந்த வயது 16
டினேஸ் சுஜீத் விஜயகுமார் 1996 - 2013 Winterthur - Switzerland சுவிஸ்
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 18.06.2019

சுவிஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த டினேஸ் சுஜீத் விஜயகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிட்டுக் குருவி ஒன்று
சிறகொடிந்து வீழ்ந்தது
மண்ணில் வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு
வாழ்வு முடித்து சென்றது

பால் வடியும் வதனம் அது பட்டென
போனது

படைத்தவனுக்கு புரியும்
அது வந்து நொடிப் பொழுதில்
ஆனால் நாம் நினைக்கவில்லை

தத்தித் திறந்த சிந்து முகம்
எட்டிப் போனது தூர தேசம்
எவர் வருவார் எமை மகிழ்விக்க
யார் வரினும் முடியாது

ஆண்டோ ஆறாகி போனது
மனமோ ஆறவில்லை
நின் திருவுருவம் என்றென்றும்
எம்முடன் ஆண்டவனாய்
ஜென்மம் எல்லாம் இருக்கும் ஐயா

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!

தகவல்: அப்பா, அம்மா, தங்கை

Summary

Photos

View Similar profiles