Born 23 DEC 1931
Rest 13 MAY 2019
Mrs Vijayalechchumy Nagaratnam (Vijayam Teacher)
இளைப்பாறிய உப அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை, முன்னால் ஆசிரியை கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி
Age 87
Vijayalechchumy Nagaratnam 1931 - 2019 Kokkuvil Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கொக்குவிலில் மாத்தையா செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளுக்கு  அன்பு மகளாக விஜயலட்சுமி அவர்கள் 23/DEC/1931 ஆம் ஆண்டில் இவ் அவனியில் நாகலிங்கம், பவளம்மா, சரோஜினிதேவி எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர்  குறும்புகள் செய்து  வளர்ந்து  பெரியவளானதும் மயிலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான நாகரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து மாலதி, ஜெகதீஸ்வரன், சசிலதா, டிலானி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமியாக குறையின்றி கடமைகளை ஆற்றி கோகுலன், கோபியா, யொசிக்கா, தியோ, ஜெனிக்கா போன்ற அன்புப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

மேலும் Vijayam Teacher என அன்பாக அழைக்கப்படும் இவர் கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயம்,கொழும்பு விவேகானந்தா கல்லூரி போன்றவற்றில் ஆசிரியையாக கடமை ஆற்றியதுடன்,கொக்குவில் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றி ஓய்வு நிலையும் அடைந்தார்,  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 13.05.2019 இல் 87 வயதில் பிரித்தானியாவில் உள்ள Greenford நகரில்  இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அழகிய முகமே                
......அன்பு உள்ளமே
அறிவில் சிறந்த                
......அன்னை மனமே
அறிவைப் புகட்டி                
......அகம் மகிழ்ந்து
அகிலம் துறந்தீர்                
......ஆருயிர் உறவே"