Born 16 MAR 1958
Died 28 MAR 2021
Mr Balasingam Murugeswaran (Katkandu)
Age 63
Balasingam Murugeswaran 1958 - 2021 Vasavilan Sri Lanka
Tribute
Rest in Peace
Balasingam Murugeswaran
1958 - 2021

கண்ணீரை காணிக்கை ஆக்கி கண்ணீர் பூக்கள் விழிமேல் வழியும் நேரமிது......
எம் மாமாவிற்கு, எம் உதிரம் கொதிக்கும் மருமகன்களின் கண்ணீர் அஞ்சலி....
உயிர் பிரிந்த நேரமிது.....
உலகத்தில் இல்லை உனைப்போல் ஒர் பிறவி.....

சலியாத மனத் தோனே!
தாளாது உன் பிரிவு!
தவிக்கின்றோம் உனை நினைத்து
மீளாத் துயில் கடந்து விழித்திடாயோ?
வழிமேல் விழி வைத்து வாடிய உம் மருமகன்களைக் காண வாராயோ ஒர் கணம் மாமாவே!

எம் அன்பு மாமாவே!
வாடிய முகம் கண்டு - உங்கள் வண்ண விழி மலராதோ. மனமுடைந்து அழுகின்றோம் தினம் தோறும் தேடுகின்றோம் - நீங்கள் வாடிய செய்தி ஒரு வதந்தி போல் ஆகாதோ?
விழி நீரைச் சுரந்து கண் கலங்கி நிற்கின்றோம் விழி திறந்து ஒரு கணம் வழி சொல்ல மாட்டாயோ?

சில நேரங்களில் புன்னகைகளை விட கணீர்த்துளிள் சிறப்பானவை மாமா. புன்னகையை நாம் யாருக்கும் பரிசளிக்க முடியும், ஆனால் கண்ணீரை நாம் யாரை இழக்க விருப்பமில்லையோ அவர்களுக்காக மட்டுமே சிந்த முடியும் மாமா.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தி்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

உங்கள் மருமகன்கள்,
றமணன் , றகுணன்.

Tribute by
Ramanan & Ragunan
மருமகன்
Germany & London
Write Tribute