Born 18 SEP 1970
Died 01 SEP 2019
Mrs Joseline Patric (நிவானி)
Age 48
Joseline Patric 1970 - 2019 Jaffna Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் கரம்பொன்னில் மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் பாசமிகு புதல்வியாக ஜொஸ்லின் அவர்கள் 18.09.1970ஆம் ஆண்டு பிறந்தார். சுரேஷ், மிராணி, சித்ராணி, நிரஞ்சன், ரூபன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்த இவர் இளமைப்பருவதிலேயே படிப்பில் அதிக நாட்டம் கொண்டவர்.

நிவானி என சுற்றத்தார் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவர், தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஆசிரியராக பணிபுரிய தொடங்கினார். வளர்ந்து பெரியவளானதும் ராஜசுரியர் Bridget தம்பதிகளின் அன்பு மகனான பற்றிக் ராஜசூரியர் என்பவரைத் திருமணம் முடித்து இலங்கையிலிருந்து பிரான்ஸிற்கு 2001ம் ஆண்டு குடிபெயர்ந்த இவர் அங்கும் தனது ஆசிரியர் பணியை செம்மையாக செய்து வந்தார்.லரிசா, லேயா என்ற இரு பெண்களை பெற்று நற்பண்புகளை போதித்து வளர்த்து வந்தார்.  

Piano வாசிப்பதில் அலாதி விருப்பம் கொண்ட இவர், பாடல்களை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். மேலும் நண்பர்கள், உறவுகளிடம் அதிக அன்பு காட்டுபவராகவும், தேவாலயங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவராகவும் விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.09.2019 இல் 48 வயதில் பிரான்ஸில் தனது இளம்பயதிலேயே இறைவனடி சேர்ந்தார். அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
     

"கரம்பொன் உறவே
...........கலங்கா விழியே
நிரப்பி வளியும்
..........நித்தம் புன்னகை
கரம்பற்றி பாதை
...........காட்டி உயர்த்தி
வரம்பின்றி அழவைத்து
...........போன உறவே"