10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 NOV 1927
இறப்பு 13 MAR 2010
அமரர் விசுவலிங்கம் பாக்கியலட்சுமி (பாக்கியம்)
இறந்த வயது 82
விசுவலிங்கம் பாக்கியலட்சுமி 1927 - 2010 புங்குடுதீவு 12ம் வட்டாரம் இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
திதி: 21.02.2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் பாக்கியலட்சுமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!

காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா

கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு

Photos

No Photos

View Similar profiles