- No recent search...

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதன் சிவஞானசோதி அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கு.வேலாயுதன்(சட்டத்தரணி) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொ.சிவசுப்பிரமணியம்(பென்ஸ்), குமுதினி தம்பதிகளின் மருமகனும்,
குறமகள்(கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
தேவசேனாதிபதி(சட்டத்தரணி), சுந்தரேசன்(தேசிய லொத்தர் சபையின் ஓய்வுபெற்ற பிரதி பொது முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மயூரதன்(சிங்கப்பூர்), சிவசங்கரன்(கனடா), சிவகாந்தன், வேல்விழி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதாப், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கோகுல், சுபஹரி, சிவராம், அருண்சிவா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரணவன், பைரவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 08-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். கல்லூரி நண்பனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்