மரண அறிவித்தல்
தோற்றம் 21 DEC 1959
மறைவு 05 APR 2021
திரு வேலாயுதன் சிவஞானசோதி
B.A (Econ) Hons, MSc(Bradford), UK FCMA (London), FCA (Sri Lanka), Chartered Accountant, ஜனாதிபதி செயலணியின் முன்னாள் செயலாளர், தற்போது பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்
வயது 61
வேலாயுதன் சிவஞானசோதி 1959 - 2021 கொழும்பு இலங்கை
Tribute 61 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதன் சிவஞானசோதி அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கு.வேலாயுதன்(சட்டத்தரணி) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொ.சிவசுப்பிரமணியம்(பென்ஸ்), குமுதினி தம்பதிகளின் மருமகனும்,

குறமகள்(கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

தேவசேனாதிபதி(சட்டத்தரணி), சுந்தரேசன்(தேசிய லொத்தர் சபையின்  ஓய்வுபெற்ற பிரதி பொது முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மயூரதன்(சிங்கப்பூர்), சிவசங்கரன்(கனடா), சிவகாந்தன், வேல்விழி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதாப், துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், 

கோகுல், சுபஹரி, சிவராம், அருண்சிவா ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரணவன், பைரவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 06:00 மணி வரை பொரளை ஜயரத்ன மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 08-04-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குறமகள் - மனைவி
சுந்தரேசன் - சகோதரர்
தேவா - சகோதரர்
மயூரதன் - மைத்துனர்
சிவசங்கரன் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles