Born 01 SEP 1958
Died 04 SEP 2019
Mr Rajadurai Kailayathurai (கைலாஸ்)
Age 61
Rajadurai Kailayathurai 1958 - 2019 Jaffna Sri Lanka

வாழ்க்கை வரலாறு

கைலாஸ் என்று அன்போடு அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு உன்னத ஆத்மா.யாழ்ப்பாணத்தில் 01/SEP/1958 இல் இராசதுரை மங்கயற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வராக கைலாயதுரை அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.

தங்கத்துரை, பவளத்துரை, பவளராணி, தங்கராணி, இராஜராணி, தேவராணி, அருமைத்துரை ஆகிய சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.

இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் துரைராசா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளான, சாந்தினி என்பவரைத் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக,ஆர்த்தி, ஆருணி, ஆருயன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணிபோல பாதுகாத்து வளர்த்தார்.

இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.மேலும் அன்பும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 61 வயதில் கனடாவில் இறையடி எய்தினார்.

”அருள் உருவே அறிக் கடலே
எளிமை மனமே எங்கள் உறவே
தந்தை உயிரே தங்கப் பொக்கிஷமே
பந்தம் காத்த பாச உள்ளமே
எங்கே சென்றீர் எமை விட்டு
தங்கப் பேழையில் மௌனம் ஏனோ”