1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 MAR 1935
இறப்பு 19 NOV 2018
கனகசபை போகவதியம்மா 1935 - 2018 புங்குடுதீவு 7ம் வட்டாரம் இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 08.12.2019


யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும்,  கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபை போகவதியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உங்கள் அழியாத நினைவுகள் எம்மை விட்டு நீங்காது
அம்மா உருவம் மறைந்தாலும் உள்ளம் மறையாது
எம் உள்ள பூக்களாய் உம் திருவடியை
பூசிக்கிறோம் அம்மா

கண்ணதனை இமையது காப்பது போல்
கண்ணான பிள்ளைகளைக் கருத்தோடு நீரிருந்து
கலங்காது காத்தீர் கலங்குகின்றோம் நீரின்றி
உன் நினைவால் ஆண்டொன்று ஆனதம்மா உங்கள் முகம்
பார்த்து அருகிலிருந்து ஆறுதல் தர இன்று
இங்கு நீங்கள் இல்லை எங்களுக்குத் தேறுதலாய்
இறைவனோடு சேர்ந்து தெய்வமாய்த் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம் நாம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணியளவில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகலிங்கராஜா - மருமகன்

Photos

View Similar profiles