மரண அறிவித்தல்
பிறப்பு 03 NOV 1951
இறப்பு 18 SEP 2019
திருமதி லோகநாதன் புவனேஸ்வரி
இளைப்பாறிய மருத்துவ தாதி- வட்டக்கச்சி கிளிநொச்சி
வயது 67
லோகநாதன் புவனேஸ்வரி 1951 - 2019 நெடுந்தீவு கிழக்கு இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் புவனேஸ்வரி அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசிங்கம், செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

நடனசபேசன், சர்மிளா(ஆசிரியை- மூங்கிலாறு ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, நடராசா மற்றும் பரமேஸ்வரி இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதீசதரன்(சுதா) அவர்களின் அன்பு மாமியாரும்,

அழகராணி மயில்வாகனம், தனுஷ்கோடி வசந்தகுமாரி, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலைவிழி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சபேசன் - மகன்
சர்மிளா - மகள்

Photos

View Similar profiles