மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1936
இறப்பு 14 APR 2019
திரு கதிரவேலு தம்பையா
வயது 83
கதிரவேலு தம்பையா 1936 - 2019 மட்டுவில் தெற்கு இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தம்பையா அவர்கள் 14-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி  தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேந்திரமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சைலஜா(கனடா), கிரிஜா(பிரான்ஸ்), குருபரன்(இலங்கை), காலஞ்சென்ற ரசிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தெய்வானைப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற பர்வதம், விசாலாட்சி(இலங்கை), காலஞ்சென்ற மயில்வாகனம், அழகம்மா(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம், கமலேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற கமலேஸ்வரி, இராசேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகரன், நரேந்திரன் ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

சனுஷ்கா, சர்மிகா, செளமியா, நிஷானி, நிசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் நெரியதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகரன்
சைலஜா
விஜி
கிரிஜா