Born 18 JUN 1927
Died 07 SEP 2019
Mrs Subramaniam Rasamany
Age 92
Subramaniam Rasamany 1927 - 2019 Velanai East Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த வேலணை கிழக்கில் 18/JUN/1927 இல் திரு.திருமதி நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளான இராசமணி அவர்கள் அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலெச்சுமி, பூங்காவனம், முத்தம்மா, சோதிமணி, பஞ்சரெத்தினம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து  வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அழகிய ஆண் அழகான சுப்பிரமணியம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கனகேஸ்வரி, லோகேந்திரன், குலேந்திரன், இலங்கேஸ்வரி, லோகேஸ்வரி, இலங்கேந்திரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தர்மலிங்கம், புஸ்பமலர், இந்திராணி, பாஸ்கரசிங்கம், நந்தகுமார், தவமலர் போன்றோரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                             

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றுண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.                                         

இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 07.09.2019 இல் 92 வயதில் பிரான்ஸ்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.   

”கண்ணாடி விழியால் கதைகள் பேசும்
பண்பான பாட்டியே பாசப் பூட்டியே
அன்பாக வளர்த்து அன்னம் ஊட்டிய
ஆசை உறவே பாச மலையே
காணத் தவிக்கிறோம் கருனை காட்டுங்கள்”