மரண அறிவித்தல்
பிறப்பு 07 JAN 1934
இறப்பு 20 MAY 2019
திரு சுப்பிரமணியம் ஜெயபாலசிங்கம்
சுப்பிரமணியம் ஜெயபாலசிங்கம் 1934 - 2019 யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயபாலசிங்கம் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினம்(குஞ்சம்மா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயந்தி(இலங்கை), சாந்தி(ஜேர்மனி), சுகந்தி(லண்டன்), வைஜந்தி(லண்டன்), ஜெயரட்ணம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, தவமணி மற்றும் தனபாலசிங்கம், சிவபாலசிங்கம், ஜெயபாலேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகேஸ்வரி, கந்தசாமி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாலன்(ஜேர்மனி), மனோகரன், கபிலன், சுமனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாஸ்கரன், லோகேஸ்வரன், வரதராஜன், ஜெயபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுதாகரன், சுலக்ஸ்சனா, டயானா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

மிதுனலோஜினி, சிறிபத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

கரிகரன், ஜெயகரன்(லண்டன்), சாருஜன், சிவருஜன்(ஜேர்மனி), றிஷிக்கா, றிஷிகரன், திகழ்வாணி, தட்சயா(லண்டன்), கஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அப்பா!
அன்போடு அறிவும் ஊட்டி
எம்மை வளர்த்தீர்கள்!
ஆலமரம் போலிருந்து
ஆறுதலைத் தந்தீர்கள்!
மெழுகு போல் உமை உருக்கி
ஒளியேற்றி வைத்தீர்கள்! இன்று
எமையெல்லாம் தவிக்கவிட்டு
எங்கப்பா சென்றீர்கள்?

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதன் - மருமகன்
சுதர்சன் - பெறாமகன்
ஜெயந்தி - மகள்
மீனா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்