Born 12 AUG 1952
Died 07 SEP 2019
Mrs Shyamala Rathanarajah
Age 67
Shyamala Rathanarajah 1952 - 2019 Colombo Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இயற்கை அழகு நிறைந்த இலங்கையில் மக்கள் நெருங்கு வாழும் பகுதியும்,சகல இன மக்களும் ஒன்றாக வாழும் இடமும், இலங்கையின் தலைநகருமான கொழும்பில் 12/AUG/1952 இல் திரு.திருமதி வாமதேவா சோமகாந்தி தம்பதிகளின் அன்பு கொண்ட சியாமளா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சுகுமார், ராஜகுமார், ரவிச்சந்திரன் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும், திரு.திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மகன் இரட்ணராஜா எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்.                                               

இவ்வாறு கணவன், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 67 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

”கொழும்பில் பிறந்த குல விளக்கே
கரும்பு போல் இனிய மனமே
அரும்பில் பூத்த வாச மலரே
விரும்பிச் சிரிப்பீர் வீணை ஒலி போல்
நரம்பு நாடி நடுங்க
வரம்பில் தவிக்கும் உள்ளம் போல்
பரம்பி வாழ்ந்த உறவுகளை பிரிந்து
சென்ற இடம் எங்கே
சுரக்கும் கண்ணீர் சுடுநீராகப் பாய
சிரிக்கும் உமைத் தேடுகிறோம்”