நன்றி நவிலல்
திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் பிறப்பு : 11 SEP 1960 - இறப்பு : 11 OCT 2019 (வயது 59)
பிறந்த இடம் அரியாலை
வாழ்ந்த இடம் Solingen - Germany
புஸ்பகலாதேவி கமலநாதன் 1960 - 2019 அரியாலை இலங்கை
நன்றி நவிலல்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!

கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர், ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +491738397341

தொடர்புகளுக்கு

முரளிபிரசாத் தர்சினி - மகள்
ரதிகுமார் ரஜனி - மகள்
லிங்காதரன்(கண்ணன்) - மகன்
கமலநாதன் - கணவர்
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.