- No recent search...

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பஞ்சாட்சரம் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவலோகநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
திரவியம், சிவலோகநாதன், சிவபாதசுந்தரம், பேரானந்தநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, கனகலட்சுமி, பரமசாமி ஆகியோரின் சகலனும்,
சந்திரகுமார்(குமார்), சறோஜாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அவ்வை, சுதாதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா-இஷான், தனுஷா-டேமியன், நிலுஜா-ஜெயந்தன், நித்தியா, சுபாங்கன், கிருஷாந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மிக்கேல், டிரேன், அட்டீரா, அஹாரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை A.F. Raymond Funeral Directors, Raymond House, 115 D. S. Senanayake, Mawatha எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!