Born 08 JAN 1976
Died 20 JUL 2019
Mr Senthuran Rajenthiran
Age 43
Senthuran Rajenthiran 1976 - 2019 Karampan East Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்.கரம்பனில் புகழ் பூத்த சீமான் திரு.ராஜேந்திரன் அவர்தம் பாரியார்  ரோகிணிதேவி அவர்களின் அருமைப் புத்திரனாக 08/JAN/1976 ஆம் ஆண்டில் திரு.செந்தூரன் அவர்கள் வாசுகி, புரூணசகி, கஸ்தூரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                        

அத்துடன் இராஜநாயகம் அன்னபூரண்/முத்துசாமி சற்குணம் போன்றவர்களின் பேரனாக மடிமீது தவழ்ந்து வளர்ந்து இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர்  தன் தந்தையுடன்  சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.சிவபுண்ணிய மூர்த்தி முத்துலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் ருஜாந்தி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.                                               

மேலும்   இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும்  விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக  விளங்கியதுடன் சகோதரபாசம்  கொண்டும் விளங்கினார்.  இவ்வாறு மனைவி,உற்றார்,உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 20.07.2019 இல் 43 வயதில் சுவிஸில் உள்ள Luzern நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

""குல விளக்கே        
.....கோவில் சிலையே 
குங்கும நிறமே        
......குல தெய்வமே
அறிவின் ஊற்றே        
....அன்பு மனமே
அன்பாய் பேசி        
....அகிலம் துறந்தீரே.""