நன்றி நவிலல்
திருமதி செல்லையா அமுதம்மா அன்னை மடியில் : 30 JUL 1930 - ஆண்டவன் அடியில் : 09 MAR 2021 (வயது 90)
பிறந்த இடம் கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம் கோவில் புதுக்குளம்
செல்லையா அமுதம்மா 1930 - 2021 கரவெட்டி கிழக்கு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக்குளம் 6ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அமுதம்மா அவர்களின் நன்றி நவிலல்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.