Born 18 JAN 1938
Died 20 JUN 2019
Late Periyathambi Velayuthapillai
Age 81
Periyathambi Velayuthapillai 1938 - 2019 Inuvil East Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் கோவில்கள் சூழ்ந்த அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், பிரசித்தி பெற்ற கந்தன் அருள்பாலிக்கும் இடமும் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த இணுவில் கிழக்கில் 18/Jan/1938 இல் திரு திருமதி பெரியதம்பி கண்மணி  தம்பதிகளின் அன்பு மகன் திரு.வேலாயுதபிள்ளை  அவர்கள்  இவ் அழகு நிறைந்த இடத்தில்   மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வரட்ணம், ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரி மகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ரமணி, ரமேஸ், ரமணன், ரஜீவன், கமலினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து கேதீஸ்வரன், பாமினி, சாந்தினி, சூர்யா, தாசன் என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து வாகினி, விக்னேஸ், ராகவி, திவ்யா, வித்யா, நிருஜா, அஸ்வின், விபுஷா, ஜஸ்னன், அனிஜன், ஹரீஸ் போன்ற அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.                                           

மேலும் இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.06.2019 இல் 81 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

மனதிற்குள் அழுகிறோம்
மங்காத உங்கள் நினைவில்
பங்கம் நினையா பாசம் நிறைந்த
வரேதங்க குணமும் தயவும்
எங்கும் பரவியுள்ளது