31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
திரு நாகலிங்கம் வில்வராஜன் முன்னாள் பரிபாலன சபை உறுப்பினர்- கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயம், அம்பாளின் ஆலய நீண்ட கால தொண்டர், திருவையாறு பகுதியின் மூத்த குடிமகன் பிறப்பு : 01 JAN 1942 - இறப்பு : 02 JUL 2020 (வயது 78)
பிறந்த இடம் அளவெட்டி
வாழ்ந்த இடம் திருவையாறு
நாகலிங்கம் வில்வராஜன் 1942 - 2020 அளவெட்டி இலங்கை
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வில்வராஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட நாகலிங்கம் வில்வராஜன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியைகள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 01-08-2020 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இல.67/1, திருவையாறு, கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர் +94778042358
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.