5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 APR 1920
இறப்பு 25 JUN 2015
அமரர் ஆறுமுகம் சின்னத்தங்கம்
இறந்த வயது 95
ஆறுமுகம் சின்னத்தங்கம் 1920 - 2015 நயினாதீவு இலங்கை
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த  ஆறுமுகம் சின்னத்தங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

பெற்றெடுத்துப் பெயர் சூட்டி
பேரழகாய்த் தாலாட்டி
ஆலமரமாய் எமை தாங்கி
கற்றவராய் பெருமை மிக்க மானிடராய்
உருவாக்கிய எம் அன்னையே!

ஆண்டுகள் ஐந்து கடந்தாலும்
ஆறமுடியவில்லை அம்மா எம்மால்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா! 

மனம் ஆறாத் துயரோடு உங்கள்
நினைவோடு கண்களில் நீரோடு
வழி கடந்து செல்கின்றோம் அம்மா!

உன் மடியே சொர்க்கமம்மா
உலகில் வேறு சுகம் உள்ளதெல்லாம்
பொய் அம்மா இதை உணர்ந்தவர் வாழ்வில்
துன்பமது நெருங்காதம்மா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உந்தன் முகம்
என்னாளும் உயிர் வாழும் 

என்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை  பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles