1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 AUG 1956
இறப்பு 08 APR 2020
அமரர் அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம்
இறந்த வயது 63
அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம் 1956 - 2020 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 63 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அனிஸ்டன் ரவீந்திரன் திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குல தீபமே!
எங்கள் குடும்பத்திற்கு ஒளி ஏற்றிய
குன்றினில் ஏற்றிய தீபமே!

எமக்குக் கூறாமல் எமைவிட்டு மறைந்ததேனோ
ஆண்டொன்று சென்றாலும் ஆறிடுமோ எம்துயரம்
வருடமொன்று கடந்தாலும் மாறிடுமோ உங்கள் நினைவு
தன் வாழ்வுக்கு வழிதேடி எம் வாழ்வுக்கு வழிகாட்டியவரே
நாம் வாழ்வாங்கு வாழும்போது எமது வாழ்வைப் பாராமல்
வானுலகம் சென்றதேனோ

கடந்துவிட்ட ஒருவருடத்தில் கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து கண்ணீர் வடிக்குதையா

கூடுகலைந்த குருவிகளாய் நாடுவிட்டு இங்கு வந்தவர்களுக்கு
ஆரம்பத்தில் ஆதரவு அளித்ததாக அனைவரும் கூறுகின்றனர்
அதைக்கேட்க மனம் குளிருதையா எனினும் உனை நினைத்து
மனம் தவிக்குதையா

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...


தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles

  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Ratnasingam Nesarajah Jaffna, Trincomalee View Profile
  • Rasanayakam Raveendran Point Pedro, Saravanai, Kanton Uri - Switzerland View Profile
  • Nagulambikai Kugathayabaran Chavakachcheri, Berlin - Germany, Ilford - United Kingdom View Profile