Born 10 OCT 1943
Died 13 AUG 2019
Mrs Rathinam Someswary
Age 75
Rathinam Someswary 1943 - 2019 Neduntivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நெடுந்தீவில் 10/OCT/1943 இல் திரு.திருமதி வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் சோமேஸ்வரி  அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வரத்தினம், கனகரத்தினம், பாலசிங்கம் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சோமசுந்தரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகன் திரு. இரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக நளாயினி, நந்தினி, யசோதினி, தயாபரன், தனபாலன், சறோஜினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சிறிக்குமார், தேவாகரன், சுதாஸ்கரன், சந்தியவாணி போன்றவர்களைத் திருமணம் முடித்து நமிர்தன், கிசானி, சயாழினி, மோகிதன், ரிசானி, கவின், வருண் போன்ற பேரப்பிள்ளைகளுடம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                             

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்  அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 13.08.2019 இல் 75 வயதில் கிளிநொச்சியில்  இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

எங்கள் தாயே இன்பத் தாயே
திங்கள் போன்று ஒளிரும் தாயே
எங்கும் நன்மை பரப்பிய தாயே
உங்கள் வாழ்வு கடின வாழ்வே
எங்கள் மீது பாசம் பொழிந்து
எங்கே போனீர் தங்கத் தாயே