Born 23 DEC 1962
Died 04 SEP 2019
Mr Thiyaroopan Sundralingam
Age 56
Thiyaroopan Sundralingam 1962 - 2019 Mallakam Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் மல்லாகத்தில் 23/DEC/1962 இல் திரு.திருமதி சுந்தரலிங்கம் சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தியைரூபன் அவர்கள்   இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.                                        

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரி, சுகந்தன், ஜெயசுதா எனும் சகோதரர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் மலர் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சம்ஜா,தனுஷன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                              

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.                                                         

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 56 வயதில் ஜேர்மனியில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"மல்லாகம் தந்த மாசற்ற           
குல விளக்கே
சொல்லில் சிறந்த           
சொந்த உறவே
பல் வார்த்தை           
பக்குவமாய் பேசிவில்
அம்பு போல்           
விரைந்து சென்று
கல் மனங்களை          
கரைய வைத்து
கண்ணீர் மழை          
சிந்த வைத்தீரே"