மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1939
இறப்பு 26 MAR 2020
திரு செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற எழுதுனர், விவசாயி திணைக்களம், அன்னை தாகசாந்தி மணிமண்டபம் நயினாதீவு- நிறுவனர் -2020
வயது 80
செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் 1939 - 2020 நயினாதீவு இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

நயீனாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS வீதி சிவலிங்கப்புளியடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் நல்லதம்பி சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  

கிரிசாம்பாள்(ஓய்வுநிலை ஆசிரியை- யாழ். இந்துமகளிர் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, பரராஜசிங்கம், தங்கலட்சுமி, ஓங்காரலட்சுமி மற்றும் பரமேஸ்வரி, துரைராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

 நாகேஸ்வரி(இத்தாலி), நிமலன்(பிரித்தானியா), விமலன்(பிரித்தானியா), காமினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  

உதயகுமார், கவிதா, பிரேமிளா, றுசேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், கணபதிப்பிள்ளை, இலங்கைநாயகம், வேல்முருகன்பிள்ளை, சிறிகாந்தன், கனகராஜா, கணேசன், சந்திரன் மற்றும் சரோஜினி, சகுந்தலாதேவி, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜி, ராசம்மா, நாகரத்தினம், லலிதாம்பாள், நாகம்மா ஆகியோரின் அன்புச் சகலனும்,

 ஜீவிதன், நிரூஜன், அனன்ஜா, ஜனுசா, துசிகா, அனுசாந், அஸ்ணவி, அனோஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பையன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிரிசாம்பாள் - மனைவி
நாகேஸ்வரி உதயகுமார் - மகள்
நிமலன் - மகன்
விமலன் - மகன்
காமினி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles