Born 11 FEB 1935
Died 12 AUG 2019
Mrs Selliah Sivapakkiam
Age 84
Selliah Sivapakkiam 1935 - 2019 Punakari Sri Lanka

வாழ்க்கை வரலாறு

கிளிநொச்சியில் நெல்வயல் சூழ்ந்த அழகிய இடமும்,படித்த மக்களைக் கொண்ட பிரதேசமும்,மரக்கறித் தோட்டம்,வீட்டுத் தோட்டம் என செழிப்பு மிகு பூநகரியில் 11/FEB/1935 இல் திரு.திருமதி சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமை மகளாய் சிவபாக்கியம்  அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நமசிவாயம் செல்லையா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக சண்முகதாசன், நிர்மலாதேவி, ஜெகதீசன், சிவநேசன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து விமலேஸ்வரி, தர்மலிங்கம், ஞானாம்பிகை, கோமளாதேவி போன்றவர்களைத் திருமணம் முடித்து சதீசன் சாரதா, அருணேசன் அமரகவி, அரவிந்தன் மைதிலி, பார்த்திபன் பிரியா, தர்மினி தயா, கரிகாலன், துஸ்யந்தன் சாரு, சாரங்கன் மேனகா, செந்தூரன் சர்மிதா, மயூரன் நிஜந்தா, சரண்ஜா தாஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், சரண், சஞ்ஜே, அஜே, அருவி, அஷ்வின், ஆரவி, ஆருஷ், அரிஷ், இசைஞன், இசானி, இனுஷன், தாரகி, தர்வின், வர்ஷன், வர்ஷானி, வர்ஷ்ரின், அஷ்வின், அனோஷ், அமிஷா, அனிஷ் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும்  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்  அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 12.08.2019 இல் 84 வயதில் வவுனியாவில் உள்ள தவசிக்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

பூநகரி மண்ணின்   பூங் கொத்தே
தேன் மனம் கொண்ட  தென்றல் காற்றே
வான் புகழ் ஓங்கி  வையகம் காத்து
மாங்கனி போல்  மனதில் இனித்து
நந்தவன பூவாய்  நறுமணம் வீசி
விடை பெற்றீரே  எமைப் பிரிந்து