4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1960
இறப்பு 10 AUG 2016
அமரர் தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன்
இறந்த வயது 56
தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் 1960 - 2016 நெடுந்தீவு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, சுவிஸ் Laufen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் நான்கு ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

நான்கு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

Photos

View Similar profiles