Born 25 JUL 1929
Died 08 SEP 2019
Mrs Saraswathi Thiruvenkatam
Age 90
Saraswathi Thiruvenkatam 1929 - 2019 Malaysia Malaysia

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில்  25/JUL/1929 இல் திரு.திருமதி கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளான சரஸ்வதி அவர்கள் மகேஸ்வரி,செல்வசிங்கம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து  வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அழகிய ஆண் அழகான திருவேங்கடம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சுலோயனா, சந்திரசோதி, வசந்தா, சாந்தா, சசிரேகா, ஸ்ரீலதா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவலிங்கம், விபுலானந்தன், குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்திரா, றொபர்ட், சுதானந்தன், வரேந்திரன், மனோராகவன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                             

மேலும் யாழ்.காரைநகர் வலந்தலையிலும் வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.                                          

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 08.09.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Brampton நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.   

”வயிற்று வலி பொறுத்து
உயிர் தந்த உறவே
பயிர் போல்
பார்த்துப்பார்த்து வளர்த்து
 வாழ்வில் ஒளி ஏற்றி
விட்டுச் சென்றீரே அம்மா”