2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 OCT 1936
இறப்பு 04 FEB 2018
அமரர் கந்தையா சுப்பிரமணியம்
முன்னாள் பிரபல வர்த்தகர் வல்லிபுரம் ஸ்ரோர், என்.கே மணியம் ஸ்ரோர், சிவா மரக்களை உரிமையாளாரும்
இறந்த வயது 81
கந்தையா சுப்பிரமணியம் 1936 - 2018 வயாவிளான் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், இணுவில், உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை  வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம் 
உங்கள் ஆத்மா சாந்திபெற

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....

உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுப்தா(சிவா) - மகன்

Photos

No Photos

View Similar profiles