Born 14 JAN 1958
Died 11 APR 2019
Mrs Balachandran Thavamany
முன்னாள் கரைச்சி பிரதேசசபை நூலக உதவியாளர்
Age 61
Balachandran Thavamany 1958 - 2019 Neduntivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும் தீவுக்கூட்டங்களில் பெரிய தீவும்  கடலுணவு, கால்நடை வளர்ப்பு,மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள்,நன்கு படித்த சமுகத்தை கொண்ட மக்கள் காணப்படுவதுமான  அழகு நிறைந்த தீவான நெடுந்தீவில் 14-01-1958 இல் அம்பலம் தெய்வானை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக தவமணி அவதரித்தார். அன்பும் பண்பும் நிறைந்த இவர் இந்திராதேவி, விசுவலிங்கம், இந்திரதாஸ், கௌரி, பாலசரஸ்வதி,யோகராணி, சஜீக்கா போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் இரத்தினராசா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனான பாலச்சந்திரன் என்பவரைத் திருமணம் முடித்து  மகிழ்ச்சியாக வாழ்ந்து வினோஜா, இராசேந்திரபிரசாத், பிரசன்னா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.  

இவர் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும்  விளங்கினார், கரைச்சி பிரதேசசபை நூலக உதவியாளராக பல காலம் கடமை செய்து ஓய்வு நிலை அடைந்ததுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்ததுடன், சுவையான உணவுகள் செய்வதிலும்,வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை கடமையாக எண்ணிச் செயற்பட்டார்.  

இவ்வாறு பிள்ளைகளுடன் இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 11.04.2019 இல் 61 வயதில் கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியிலுள்ள வீட்டில்  இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்னையே எங்கள்   
அன்புத் தெய்வமே
இன்ப மொழி  
இனிமையாகப் பேசி
துன்ப வேளை  
துனையாக காத்து
துடிக்க விட்டுப்
பிரிந்தது ஏன்""