Born 13 FEB 1959
Died 12 AUG 2019
Mrs Shuganthie Mahendiran
Age 60
Shuganthie Mahendiran 1959 - 2019 Chunnakam Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சுன்னாகத்தில் 13/FEB/1959 இல் திரு.திருமதி Dr.பத்மநாதன் கமலாதேவி தம்பதிகளின் அருமை மகளாய் சுகந்தி அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சூரியகுமார், பிறேம்குமார், ஜெயந்தி, நிமலகுமார் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி அரியரட்ணம் சிவகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகன் திரு.மகேந்திரன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக சுபன், மயூரி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பிரியங்கா, ஜேன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்  அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 12.08.2019 இல் 60 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

"புன்னகை முகமே   புன் சிரிப்பே
இன்மொழிப் பேச்சே   இளமை  உருவே
இரக்க மனமே   இளம் தென்றலே
இங்கே நாம் தவிக்க  எங்கே போனீர்"