Born 11 SEP 1950
Died 05 AUG 2019
Mrs Manonmany Mahendram
Age 68
Manonmany Mahendram 1950 - 2019 Navali Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் வளர்த்த புகழ் பெற்ற புலவரான தங்கதாத்தா என அனைவராலும் அழைக்கப்படும் சோமசுந்தப்புலவர் வாழ்ந்த நவாலியில் 11/SEP/1950 இல் திரு.திருமதி வல்லிபுரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமை மகளாய் மனோன்மணி  அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குணரட்ணம்,சத்தியவான் போன்றவர்களின் சகோதரியாக மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனான Manager,Easttown Banguet Hall செல்லத்துரை மகேந்திரம்  என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக நிருஷா மகேந்திரம் எனும் அன்புப் பிள்ளையை பெற்று பாதுகாத்து வளர்த்து  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் மணியக்கா என ஊரவரால் அன்பாக அழைக்கப்படும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.                                           இவ்வாறு கணவன், பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர்05.08.2019 இல் 68 வயதில் கனடாவில் உள்ள Stouffville நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் வேண்டுகிறோம்.

புன்னகை முகமே பூவிழிப் பார்வையே
தண்குளிர் மலரே தாயே
தாமரைப் பொட்டே 
எம் மலர்க் கண் வாடாது
என்னுடன் வாழ்ந்து
எங்கே போனீர் எமைப் பிரிந்து