மரண அறிவித்தல்
பிறப்பு 09 FEB 1939
இறப்பு 24 MAY 2020
திரு யோகரட்ணம் பூபாலசிங்கம்
கூட்டுறவு முகாமையாளர்
வயது 81
யோகரட்ணம் பூபாலசிங்கம் 1939 - 2020 மானிப்பாய் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகரட்ணம் பூபாலசிங்கம்  அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி(சுவீடன்), அகிலன்(கனடா), சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்திமலர்(இலங்கை), துரைசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருஞானவதி, சிலோசனாவதி(சுவிஸ்), அற்புதவதி(லண்டன்), சந்திராவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரதிபாலன்(சுவீடன்), தேவகி(கனடா), தாரணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரோன், ரூடாஸ், ஆமோஸ், யனுசன், பதுமிதா, ஸ்ரீசி, பிரணவி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமதி - மகள்
அகிலன் - மகன்
சுதா - மகன்

Photos

View Similar profiles