Born 10 OCT 1937
Died 07 SEP 2019
Mrs Srimathi Kamaladevi Subramania Sasthirikal
Age 81
Srimathi Kamaladevi Subramania Sasthirikal 1937 - 2019 Nallur Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியில் 10/OCT/1937 இல், குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியாக ஸ்ரீமதி கமலாதேவி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.

இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த, சுப்பிரமண்ய சாஸ்திரிகளை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு, சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கினார்.

இவ்வாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 81 வயதில் இறைபதம் அடைந்தார்.

”பாசத்தின் பிறப்பிடமே
கருணையின் ஊற்றே
எங்கள் மனதில்
உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்”