Born 12 OCT 1934
Died 06 NOV 2019
Mr Subramaniyam Sugumaran
ஓய்வுபெற்ற வாழைச்சேனை காகித தொழிற்சாலை உத்தியோகத்தர்
Age 85
Subramaniyam Sugumaran 1934 - 2019 Singapore Singapore

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ள சிறிய தீபகற்பமும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்குவதுடன் சிறந்த துறைமுகங்களைக் கொண்ட அழகு நிறைந்த சிங்க நகரமான சிங்கப்பூரில் 12/OCT/1934 ஆம் ஆண்டில் திரு.திருமதி சுப்ரமணியம் சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக திரு.சுகுமாரன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                        

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நடராஜா,இராசம்மா எனும் சகோதரிகளுடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான மகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.                                              

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சுபீதகுமார், ரவீந்திரகுமார், சுரேஷ்குமார், சுரேந்திரகுமார் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து நல் கல்வியை புகட்டி பெரியவர்களானதும் லோகராஜினி, சலுஜா, லதா, வனிதா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து கிருசன், ஜாகுலன், கீர்த்திகா, அருண், அணோஸ்டன், ஜென்சி, சாய்யிகா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் சங்கானை மற்றும் மட்டக்களப்பு வாழைச்சேனையில் வாழ்ந்த இவர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை உத்தியோகத்தராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன் , அதிக அன்பு கொண்டவரும்  உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார்.                                                இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் . 06.11.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சிங்கப்பூர் சிங்கமே அங்கம் வருந்தி உழைத்தவரே
பங்கம் இல்லா நல் உள்ளமே
எங்கள் மனதில் நிலையாய் நிலைத்து
எங்கே போனீர் எமை விட்டு
உங்கள் நினைவில் நித்தம் மூழ்கித் தவிக்கிறோம்