மரண அறிவித்தல்
பிறப்பு 21 OCT 1935
இறப்பு 29 NOV 2019
திரு இராசரத்தினம் இராசநாதன்
பொருளியலாளர் கொழும்பு மாநகரசபை
வயது 84
இராசரத்தினம் இராசநாதன் 1935 - 2019 அரசடித்தீவு இலங்கை
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரசடி வீதி, வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கலாசாலை வீதி திருநெல்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இராசநாதன் அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மைலைநாதன்(மைலோன், பொருளியலாளர் - அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகம்பிகை, மனோரஞ்சிதம்(ஆசிரியை) ஆகியோரின் சகோதரரும்,

அபர்னா(அவுஸ்திரேலியா), ரவீந்திரன், சிவகாமி, சந்திரவதனி, ஜெயகுமார், விநோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாலசிங்கம்(லிகிதர்), காலஞ்சென்ற இராசேந்திரம்(பெரும்பாக உத்தியோகத்தர்), கதிர்காமநாதன்(லண்டன்), கைலைநாதன்(அவுஸ்திரேலியா), தர்மபூபதி(அவுஸ்திரேலியா), கோசலாதேவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கலியுகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரி(அவுஸ்திரேலியா), கஜானி, தேனுஜா, விதுஜா, லக்ஸ்சுயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அரசடி வீதி, வடலியடைப்பு, பண்டத்தரிப்பு இல்லத்தில் 02-12-2019 திங்கட்கிழமை அன்று மதியம் 01:00 மணியளவில் நடைபெற்று விளாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மகன்

தொடர்புகளுக்கு

மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Srimathi Meenalogini Balakrishnaiyer Manipay, Colombo View Profile
  • Jegatheeswary Vigneswaran Kaladdi, Chulipuram, Markham - Canada View Profile
  • Thuraiyappah Ratnasabapathy Saravanai, Velanai, Puliyangkoodal, Ramanathapuram View Profile
  • Sinnathampi Sivayoganathan Urelu, Colombo, Mallakam View Profile