Born 30 OCT 1955
Died 23 AUG 2019
Mr Muthukumaraswamy Kailasanathan (கைலாஸ், மாதவன்)
Age 63
Muthukumaraswamy Kailasanathan 1955 - 2019 Jaffna Sri Lanka

வாழ்க்கை வரலாறு

கைலாஸ் என்றும் மாதவன் என்றும் அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் கருணையும் கொண்ட ஒரு உன்னத ஆத்மா. யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் 30/OCT/1955 இல் முத்துக்குமாரசாமி பர்வதவர்சினி தம்பதிகளின் அன்பு மகனாக இவ் அவனியில் வந்துதித்தார்.

சிவலோகநாதன், சுவாமிநாதன், கைலேஸ்வரி, கனகேஸ்வரி, ரவீந்திரநாத், அமரநாதன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.

பிரியன், சூரியன் எனும் பிள்ளைகளை பெற்று கண்ணின் மணிபோல் பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

தனக்கே உரித்தான புன்சிரிப்பு கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார்.இவ்வாறு பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 23.08.2019 இல் 63 வயதில் பிரித்தானியாவில் இறைபதம் அடைந்தார்.

”புன்னகை முகமுடன்
கண்ணெதிரே தோன்றுவீரே
அன்பு மனம் மாறாது
அள்ளி அணைத்த உயிரே
தள்ளிப் போனீரே
தவிக்கிறோம் இன்று”