3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 SEP 1980
உதிர்வு 09 FEB 2016
அமரர் ரேணுகா தவயோகராஜன்
இறந்த வயது 35
ரேணுகா தவயோகராஜன் 1980 - 2016 Sangarathai இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா தவயோகராஜன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டாண்டு தோறும் அழுது புலம்பினாலும்
மாண்டார் வருவாரோ இம் மாநிலத்தில்
என்ற ஒளவையின் வார்த்தைக்கு இணங்க
எங்களை விட்டு பிரிந்து தெய்வத்துள் தெய்வமாகி விட்ட
உங்களின் மூன்றாம்  ஆண்டு நினைவஞ்சலி


அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
உங்கள் அன்பு முகமும், பாசமும், புன்சிரிப்பும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
இன்னொரு ஜென்மம் இருந்தால் அதிலும் நீங்களே
எங்கள் வீட்டின் ஆலமரமாகவும் அதில் நானும் பிள்ளைகளும்
விழுதுகளாகவும் வர இறைவனை வேண்டுகிறேன்

அம்மா!
நீங்கள் மண்ணில் மறைந்து
ஆண்டுகள் மூன்று ஆயினும்-  எங்கள்
நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள்
காலைக் கதிரவன் கதிரினிலே கரையும்
வெண் பனித்துளிகள் போல்  உம் நினைவுகள்
ஒவ்வொரு விடியலிலும் எம்மோடு  கலந்திருக்கும்


கனவுகளை நாங்கள் சுமந்து  கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!
உங்களது  ஆத்மா சாந்தியடைய
அன்னையின் காலடியே சொர்க்கம் என்ற
உண்மையினை  இதயத்தில் ஏற்றி
ஒவ்வொரு நாளும் இறைவனை வேண்டுகின்றோம்!தகவல்: கணவர், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

கணவர், பிள்ளைகள்

Summary

Photos

No Photos