Born 16 JAN 2016
Died 16 APR 2019
Miss Jessie Jegaseelan
Age 3
Jessie Jegaseelan 2016 - 2019 Bristol - United Kingdom United Kingdom

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,தெங்கு தோட்டம்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த முல்லைத்தீவை பூர்வீகமாக கொண்ட ஜெகசீலன் மிதிலா தம்பதிகளுக்கு,இங்கிலாந்து  Bristol நகரில் 16/Jan/2016 ஆம் ஆண்டில் அழகு மகளாக ஜெசி  அவர்கள் இவ் நாட்டில் அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் ஜஷ்வின் எனும் உடன் பிறந்த அண்ணாவுடன் குறும்புகள் செய்து  மெல்ல மெல்ல வளர்ந்து வந்ததுடன்,செம்மலை சுப்பிரமணியம் சகுந்தலா / புதுக்குடியிருப்பு தவராசா பராசக்தி தம்பதிகளுடன் பேத்தியாக தொலைபேசியில் செல்ல வார்த்தைகள் பேசி சிரித்து மகிழ்ந்தார்.

இவ்வாறு தந்தை, தாய், அண்ணா என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 17-04-2019 இல் 03 வயதில் இங்கிலாந்தில் உள்ள Bristol நகரில் அகாலமரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.


சிட்டு ஜெசி             

...........

சிட்டுக் குருவி ஒன்று
சிறகொடிந்து வீழ்ந்தது
மண்ணில்வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு
வாழ்வு முடித்து சென்றது

பால் வடியும் வதனம் அதுபட்டென
போனது பலர் பேர் விம்மலுற
பார் படைத்த இறைவனோ
தவறை எண்ணி கண்ணீர் சிந்த
பைத்தியம் ஆனோம் நாம்

படைத்தவனுக்கு புரியுமோ
நோய் வந்து நொடிப் பொழுதில்
போய் முடியும் என நினைக்கவில்லை
தாய் மடியில் தாவிய உயிர்
தரணி துறக்கும் என கனவு காணவில்லை

தந்தை முகம் காண்பதையும்
தனையன் கூட பேசும் உறவும்
தத்தித் திருந்த சிந்து முகம்
எத்திப் போனது தூர தேசம்

எவர் வருவார் எமை மகிழ்விக்க
யார் வரினும் முடியாது
எம் சிட்டு ஜெசியின் சிரிப்பே
எமது உயிர் எமது வாழ்வு