- No recent search...

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குமாரசாமி அவர்கள் 22-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயவனிதா, உதயணன்(லண்டன்), மதுரகுமார்(வெள்ளை), சிவனேஸ்வரி, சிவனேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜகோபால், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் பாலாம்பிகை கனகாம்பரி(ஆசிரியை) ஆகியோரின் மாமனாரும்,
சிறீலதன்(லண்டன்), தமயந்தி(லண்டன்), வினேஜா, சிவசங்கரி(லண்டன்), விபூஷனன், சிந்துமாலா, சுமன், காலஞ்சென்ற கஸ்தூரி, ராகப்பிரியா, கானவர்சியினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிறிகேசவன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இல.3 சங்கிலியன் வீதி, நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.