Born 12 DEC 1932
Died 10 JUL 2019
Mrs Valambigai Velayuthan
Age 86
Valambigai Velayuthan 1932 - 2019 Jaffna Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் வண்ணார்பண்ணையில்  12/DEC/1932 இல் இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியாக வாலாம்பிகை  அவர்கள் நடராஜா, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, செல்வராஜா, விக்னேஸ்வரன், ஞானம்பிகை, விக்னேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் தம்பாப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின்  அறிவு நிறைந்த ஆண் மகனான வேலாயுதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக குகதாஸ், ராகினி, சிராணி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ரஜிகோகிலா, ராஜ்குமார், விக்னகுமார் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து அபிராமி, சிவகாமி, கோகுலன், நிருஷா, தனுசா, குமரன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், மஹியல், மகீத்தா, மீலா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும்  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                            

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தராக விளங்கிய இவர்  அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 10.07.2019 இல் 86 வயதில் பிரித்தானியாவில் உள்ள Clayhall நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வட்ட முகமே          
வள்ளல் மனமே
சிட்டுப்  போல்          
சிந்தை உள்ளமே
கட்டுக் கோப்புடன்          
காத்தருளி
பட்ட  மரம் போல்           
வாடிப் போனீரே