31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 OCT 1933
இறப்பு 21 APR 2019
அமரர் திருநாவுக்கரசு கண்ணம்மா
இறந்த வயது 85
திருநாவுக்கரசு கண்ணம்மா 1933 - 2019 புளியங்கூடல் இலங்கை
Tribute 0 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு கண்ணம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும்
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே!

குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே!

தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும்
மக்கள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

எங்கள் அம்மாவின் பிரிவால் துயருற்று இருந்தவேளை எம் இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறி இரங்கலைத் தெரிவித்தவர்களுக்கும் எம் அன்னையின் இறுதிக்கிரியைகளில் வந்து கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் தொலைபேசி, முகநூல் மூலம் அனுதாபம் தெரிவித்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நாதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

View Similar profiles