நன்றி நவிலல்
திரு வைரவப்பிள்ளை திருனாவுக்கரசு (அச்சாத்தம்பி) ஓய்வுபெற்ற ஆயுள் வேத வைத்தியர் பிறப்பு : 26 DEC 1933 - இறப்பு : 15 JAN 2020 (வயது 86)
பிறந்த இடம் கருகம்பனை
வாழ்ந்த இடம் அன்புவழிபுரம்
வைரவப்பிள்ளை திருனாவுக்கரசு 1933 - 2020 கருகம்பனை இலங்கை
நன்றி நவிலல்

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரவப்பிள்ளை திருனாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

உயிர் தந்து உடல் தந்து உழைப்பையும் தந்தீர்கள்!
உடனிருந்து அரவணைத்து உணவளித்துக் காத்தீர்கள்
துணிவுடன் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தீர்கள்
தூயவரே நாம்வாழ வழியமைத்துத் தந்தீர்கள்!

எங்களின் உயர்வுக்கு நீங்களே வழிகாட்டியப்பா
உங்களின் பிரிவின்றி வேறுகுறை இல்லையப்பா
எங்களின் தோட்டத்தில் வாசமலர் நீங்களப்பாஎ
ங்களின் மாலையிலிருந்து ஏன்வாடி உதிர்ந்தீர்கள்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

- அழைப்பிதழ் -

31ம் நாள் நினைவஞ்சலி February 14, 2020 at 08:00 அன்னாரின் இல்லம்
இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயசங்கர் - மகன்
தர்மசீலன் - மகன்
சகீலா - மகள்
குமார் - மருமகன்
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.