Born 13 OCT 1940
Died 11 OCT 2019
Mr Appiah Sivapathasomasuntharalingam (சிவபாதம்)
பிரபல வர்த்தகர்- இருபாலை
Age 78
Appiah Sivapathasomasuntharalingam 1940 - 2019 Irupalai Sri Lanka

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கையில் தனது உழைப்பால் சாதித்து முன்னேறியவரும், அனைவரிடத்திலும் அன்பை அனுதினமும் பொழிபவருமான அப்பையா சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் யாழ்ப்பாணம் இருபாலையில் அப்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனாக சிவபாதசோமசுந்தரலிங்கம் அவர்கள் 13/OCT/1940 இல் பிறந்தார். பரமேஸ்வரி, யோகேஸ்வரி, இராயேஸ்வரி, லட்சுமிசோதி, ஜெகதீஸ்வரி, சந்திரசேகரம், சுந்தரலிங்கம், சிவசோதிலிங்கம் போன்ற தனது பாசத்திற்குரிய உடன்பிறப்புகளுடன் ஓடி ஆடி விளையாடி குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.

பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கிய இவர் தனது பள்ளிக்கல்வியை முடித்தவுடன், மேற்கொண்டு படிக்க விருப்பம்கொண்டு கல்லூரியில் சேர்ந்து படித்தார். பிறகு தனது தந்தையுடன் சேர்ந்து குடும்ப வியாபாரத்தை செய்யத் தொடங்கிய இவர், யாழ்ப்பாணத்தில் பெரிய வியாபாரியாக தனது உழைப்பினால் உயர்ந்தார்.

திருமண வயதை எட்டியதும் பெற்றோர் நிச்சயத்தபடி சிவக்கொழுந்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான தையல்நாயகி அவர்களை மணமுடித்ததுடன், இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக வசந்தி, ஜெயந்தி, சிவரஞ்சன், சுகந்தி, ஆனந்தி, சாந்தி, சிவராஜன் எனும் செல்வங்களை பெற்று நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினார். தனது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்கு வாழ்க்கை துணைகளாக சக்திவேல், அசோக்குமார், சுகர்ணலதா, பாலசுப்பிரமணியம், குணாளன், சர்வேஸ்வரன், ரபினி ஆகியோரைத் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார்.

சிவபாதம் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவர், 1995 ஆம் ஆண்டு கனாடாவிற்கு குடிபெயர்ந்து வாழ்த் தொடங்கியதுடன் திருமண ஒப்பந்ததாரராக திகழ்ந்து பல நல்ல மனங்களை ஒன்றினைத்து வைத்து அப்பணியை நல்ல முறையில் செய்து வந்தார். பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரோடும் பாசமாக பழகிவந்தார். சுற்றுலா செல்வதில் ஆலாதி ஆர்வம் கொண்டவரான இவர் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்ததுடன், தனது தாயகமான இலங்கைக்கு வருடா வருடம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மனித வாழ்வின் பலநிலைகளை தனது சாமர்த்தியமான அனுகுமுறைகளால் கடந்து வந்த இவர் கடந்த 5 வருடங்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததன் காரணமாக டயாலாஸிஸ் செய்து வந்தார். டயாலாஸிஸ் செய்து வந்த போதிலும் தனது தாயாகம் மீது கொண்ட அதீத அன்பினால் அங்கு சென்று வருவதை தொடர்ந்தே வந்தார். இந்நிலையில் இரு சிறுநீரகங்களும் செயலியந்ததன் காரணமாக 11.10.2019 இல் தனது 78 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்.