நன்றி நவிலல்
திரு இராசேந்திரம் சிவகுமார் (சிவா) பிறப்பு : 23 JAN 1975 - இறப்பு : 03 DEC 2020 (வயது 45)
பிறந்த இடம் நவக்கிரி
வாழ்ந்த இடம் Lausanne - Switzerland
இராசேந்திரம் சிவகுமார் 1975 - 2020 நவக்கிரி இலங்கை
நன்றி நவிலல்

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் சிவகுமார் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
எம்முடன் வாழ்ந்து

எம்மை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்ட எமது தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திகின்றோம்.


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும். வீட்டுக்குருத்திய நிகழ்வு எதிர்வரும் 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிந்துயன் - மகன்
இராசகுமார்(சேகர்- Geneva) - சகோதரன்
ஜீவா - சகோதரன்
யாழினி - சகோதரி
ஜெயந்தினி - சகோதரி
சாந்தகுமார் - சகோதரன்
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.