Born 19 APR 1937
Rest 18 JUL 2019
Mrs Sivasambu Nagammah (புஸ்பம்)
Kaka Stores - உரிமையாளர்
Age 82
Sivasambu Nagammah 1937 - 2019 Neduntivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நெடுந்தீவில்  19/Apr/1937 இல் திரு.கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அருமை மகளாய் நாகம்மா அவர்கள் நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, மருதையினார் மற்றும் வெற்றிவேல் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு.சிவசம்பு  என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக சறோஜா, பிரபாகரன், ரசிகரன், குலசேகரன், சந்திரசேகரன், ஞானசேகரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பாலசுப்பிரமணியம், சாமினி, சிவசோதி, விஜிதா, கலாஜினி, சிவானந்தி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ரம்யா, மது, வினோத், புருசோத், பிரதாப், மேனுஜா, சத்துருனியா, விக்ரம், மரகதம், மதுரா, கௌதம், அபிநயா, அஸ்வின், மிதுஷா, குசால், கிருஸ்னா, சேரன், அருண் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                            

மேலும் Kaka stores உரிமையாளரான இவரை புஸ்பம் என அன்பாக அழைப்பதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்  அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்                      இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 18.07.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அன்பு மலரே    
......அன்னை முகமே
அணைத்து மகிழ்ந்த  
......ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று 
....அகிலம் துறந்தது
அன்னை மடியின்
.....வாசம் பிரிந்தது"