- No recent search...

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களில் நிறைந்தவளே பரமனோடு கலந்தவளே!
ஒளி தந்த தீபமே! அணையா விளக்கே! அம்மா!
காசினியில் வாழ்க்கை நெறி வகுத்துரைத்து,
மழலைகளின் மனத்தை ஈர்த்து,
ஈகையொடு பிறர்பால் அன்பு காட்டி,
கலகலவென நகையுமிழும் நெல்லின் கொத்தாய்,
செயற் திறமும், சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் நிறைந்து,
நெருப்பாகத் தீயவற்றைச் சுடவே சொல்வதுடன் நிற்காது செய்துகாட்டி,
பொய் கூறிப் பொல்லாங்கு பண்ணாதே,
வாழ்வில் வெற்றி பொறுமையதே கொண்டு வரும் எனப் பகர்ந்து,
இம்மைக்கும், மறுமைக்கும் நல் ஆசானாய்ப் பாதை காட்டி,
அல்லும் பகலும் எமைக் காத்து அரவணைத்த தாயே!
உன் இனை மலரடிகளை இறைஞ்சுகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்!!!!!
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
-
-
Theresmalar Emmanuel Chundukuli, India, Colombo, Paris - France, London - United Kingdom View Profile
Rest in Peace