Born 04 MAR 1992
Rest 16 APR 2019
Late Gopinath Kasivisuwanathan
BA Hons, Brent Council Benefit Assessment Officer
Age 27
Gopinath Kasivisuwanathan 1992 - 2019 Germany Germany

வாழ்க்கை வரலாறு

உலகில் அழகு நிறைந்த நாடும், 2ம்உலக போருக்கு முன் வல்லரசு நாடுகளில் ஒன்றாக விளங்கியதும், பின்னர் அழிவில் இருந்து மீண்டதுடன், குறிப்பாக நாட்டுப்பற்று மிகுந்த மக்களை கொண்டதும் அற்பணிப்புள்ள இளைஞர்களைக் கொண்டதுமான வேகமாக வளர்ச்சி அடைந்த அழகு நிறைந்த ஜேர்மனியில் 04-03-1992 இல் காசிவிஸ்வநாதன் சுமித்திரா தம்பதிகளுக்கு அழகிய புதல்வனாய் கோபிநாத் அவர்கள் பிரேம்நாத், பிரதீப் ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த நாட்டில் அவதரித்தார்.

இவர் அன்பும் அழகும் நிறைந்த யாழ்.கரவெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராசமணி/பாலசுந்தரம் இராசமணி ஆகியோரின் அன்பில் பேரப்பிள்ளையாக மெல்ல மெல்ல குறும்புகள் நிறையப் புரிந்து இளைஞராக வளர்ந்தார். மேலும் இவர் படித்து BA Hons.முடித்ததுடன், ஜேர்மன் தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்திலும் நன்றாக கல்வி கற்று ஆசிரியர்களின் மனதில் நிலைத்த ஆழுமையுள்ள மாணவனாவான், பின்னர் Brent council Benefit Assessment Officer ஆக வேலையையும் பார்த்த கடின உழைப்பாளியாவார்.

வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு அப்பா, அம்மா, சகோதரங்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.04.2019 இல் 27 வயதில் இங்கிலாந்தில் உள்ள Harrow நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

இளமை வயதில்
......இழந்தோம் உமை
இறைவன் உம்மில்
......இரக்கம் மறந்தான்
கருணை உறவே
.....கடவுள் உள்ளமே
கலங்கி நிற்கிறோம்
.....காட்சிக்கு ஏங்குகிறோம்