- No recent search...

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இரத்தினவேல் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, பூர்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்தன்(லண்டன்), காலஞ்சென்ற அகிலன், பிரசன்னா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, தாமோதரம்பிள்ளை, இராமநாதன் மற்றும் கலைமகள்(லண்டன்), லட்சுமிதேவி(காந்தி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கல்யாணி, ராஜரூபினி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, குணவதி, சீவரட்ணம் மற்றும் சரோஜினிதேவி, கோபாலகிருஷ்ணன், மகாதேவா(கொழும்பு), காலஞ்சென்ற செல்வராசா மற்றும் சண்முகநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுருதிகா, சாருகன், திவ்வியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2020 புதன்கிழமை அன்று இல. 156 கச்சேரி நல்லூர் வீதி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.